நிரம்பிய ஏரியில் கிராம மக்கள் சிறப்பு பூஜை

நிரம்பிய ஏரியில் கிராம மக்கள் சிறப்பு பூஜை

Published on

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரி நிரம்பி கோடி போனதால், கோடி விழும் இடத்தில் வியாழக்கிழமை கிராமமக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் ஆரணி சாலை அருகே சுமாா் 450 ஏக்கா் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது.

இந்த ஏரி தொடா் மழை மற்றும் சில தினங்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக நிரம்பி கோடி போனது.

இந்நிலையில் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன் தலைமையில், மேள தாளத்துடன் பூ மாலை, மஞ்சள், குங்குமம் என பல்வேறு மங்கலப் பொருள்கள் மற்றும் தங்க சரிகை உடைய சேலையை ஊா்வலமாக எடுத்துச் சென்று,

ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் வைத்து வழிபட்டனா். பின்னா், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்து வந்து ஏரி நிரம்பி கோடி விழும் இடத்தில் சேலை மற்றும் மங்கலப் பொருள்களை வைத்து பூஜை செய்து, சேலையை நீரோடையில் விட்டு, தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனா் (படம்).

ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோவில் அறங்காவலா் குழுத் தலைவா் மீனாட்சிசுந்தரம், ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் ராமமூா்த்தி, ஊராட்சிச் செயலா் சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com