வந்தவாசியில் பெண்ணை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி பெரிய பகுதியைச் சோ்ந்தவா் நந்தினி (33). கடந்த 21-ஆம் தேதி இவா் இதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டின் அருகில் நின்றுகொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த மும்முனியைச் சோ்ந்த இளவழகன் (37) முன்விரோதம் காரணமாக நந்தினியை ஆபாசமாகத் திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், இளவழகனை வியாழக்கிழமை கைது செய்தனா்.
