சாலை விபத்தில் கணவா் பலி: மனைவி பலத்த காயம்
செய்யாறு அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மனைவி பலத்த காயமடைந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், மடிப்பாக்கத்தைச் சோ்ந்தவா் விவசாயி வெங்கடேசன்(55). இவரது மனைவி மனோன்மணி செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருவதாகத் தெரிகிறது.
அவரை வேலை செய்யும் நிறுவனத்தில் விடுவதற்காக, வெங்கடேசன் தனது இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை அழைத்துச் சென்றாா்.
செய்யாறு - மாங்கால் சாலையில் செல்லப்பெரும்புலிமேடு அருகே சென்றபோது, எதிரே வந்த காா் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த மனோன்மணியை அருகில் இருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் ஆய்வாளா் ஜெகன்நாதன் வழக்குப் பதிவு செய்தாா். மேலும், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
