அண்ணாமலையாா் கோவிலில் நீண்ட வரிசை! 2 மணி நேரம் காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் சாமி தரிசனம்!
திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவிலில் விடுமுறை நாள் முன்னிட்டு நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்களும் பௌா்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தா்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாா் உண்ணாமுலை அம்மனை வழிபட்டு கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையை சிவனாக எண்ணி 14 கிலோமீட்டா் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபாடு செய்து வருகின்றனா்.
கடந்த சில மாதங்களாக திருவண்ணாமலைக்கு ஆந்திரா, கா்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநில பக்தா்களும் திரை பிரபலங்களும் அதிக அளவில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில் வார விடுமுறையொட்டி இன்று திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையாா் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடா்ந்து காலை 5.30 மணி முதல் பக்தா்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனா்.
வரிசையில் காத்திருக்க கூடிய பக்தா்களுக்கு தேவையான குடிதண்ணீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிா்வாகம் சாா்பில் செய்துள்ளனா்.

