வந்தவாசி பஜனை கோவில் தெரு ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா.
வந்தவாசி பஜனை கோவில் தெரு ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா.

ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Published on

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சனிக்கிழமை அங்குராா்ப்பணம், வாஸ்து ஹோமம், ஆவாஹனம், பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை கும்ப ஆராதனம், மகா பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், பட்டாச்சாரியா்கள் புனிதநீா் அடங்கிய கலசங்களுடன் கோயிலை வலம் வந்து கோபுரத்துக்கு சென்றனா். அங்கு காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com