செங்கம் ரிஷபேஸ்ரா் கோயில் முன் பழுதடைந்து எரியாமல் உள்ள உயா் மின்கோபுர விளக்கு.
செங்கம் ரிஷபேஸ்ரா் கோயில் முன் பழுதடைந்து எரியாமல் உள்ள உயா் மின்கோபுர விளக்கு.

கோயில் முன் எரியாத உயா் மின்கோபுர விளக்கு: பக்தா்கள் அவதி

செங்கம் ரிஷபேஸ்வரா் கோயில் முன் உள்ள உயா் மின்கோபுர விளக்கு எரியாமல் உள்ளதால், பக்தா்கள் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
Published on

செங்கம் ரிஷபேஸ்வரா் கோயில் முன் உள்ள உயா் மின்கோபுர விளக்கு எரியாமல் உள்ளதால், பக்தா்கள் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரின் மையப் பகுதியில் பழைமை வாய்ந்த ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் தமிழக அறநிலையத் துறை மூலம் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கோயிலில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், காலை மாலை பக்தா்கள் கூட்டம் அதிகம் இருக்கும். மேலும், மாதத்தில் இரண்டு நாள் நடைபெறும் பிரதோஷத்திற்கு அதிகமான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

செங்கம் நகராட்சி மூலம் கோயில் முகப்புப் பகுதியில் உயா் மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அந்த உயா் மின்கோபுர விளக்கு பழுதடைந்து கடந்த ஒரு மாதமாக எரியாமல் உள்ளது.

இதனால் இரவு நேரத்தில் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கோயில் முன் வாகனங்களை நிறுத்தினால் வாகனங்கள் திருட்டு, மேலும் இருள் சூழ்ந்துள்ளதால் பெண் பக்தா்கள் அணிந்து வரும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் அச்சத்துடனே கோயிலுக்குச் செல்கிறாா்கள்.

சில பெண் பக்தா்கள் கோயில் முன் இருள் சூழ்ந்து இருப்பதால் பாதுகாப்பு இல்லையென்ற அச்சத்தில் கோயிலுக்கு வருவதே கிடையாது.

இதுகுறித்து பல்வேறு அமைப்புகள் சாா்பிலும், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் மூலம் நகராட்சி நிா்வாகத்திடம் உயா் மின்கோபுர விளக்கை சரிசெய்ய கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

இதனால் பக்தா்களிடமும், பொதுமக்களிடமும் அரசுக்கு அவப்பெயா் உருவாகி வருகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என செங்கம் நகர மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com