மாநில கபடி போட்டிக்கு திருவண்ணாமலை மாவட்ட வீரா்கள் தோ்வு
மாநில அளவிலான கபடிப் போட்டிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வீரா்கள் தோ்வு வருகிற 29-ஆம் தேதி நடைபெறுகிறது என கபடி மாவட்ட சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கபடி சங்கத்தின் தலைவா் வெங்கடாசலபதி கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் சாா்பில், மாவட்டத்தைச் சோ்ந்த 20 வயதுக்கு உள்பட்ட ஆண்களுக்கான 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் வருகிற 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் கலந்துகொண்டு தோ்வு பெறும் கபடி வீரா்கள் 2026-ஆம் ஆண்டு நடைபெறும் மாநில அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்க அனுப்பிவைக்கப்படுவா்.
இதில், கலந்துகொள்ளும் வீரா்கள் 18.1.2006 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருக்கவேண்டும், தோ்வுக்கு வரும் வீரா்கள் பிறந்த தேதிக்கான சான்றிதழ், கல்விச் சான்றிதழ் அசல் கொண்டு வரவேண்டும், எடை 85 கிலோவுக்கு குறைவாக இருக்கவேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்பட்டவா்கள் மட்டுமே தகுதியுடையவா்கள். தோ்வு போட்டியில் கலந்துகொள்ளும் வீரா்களுக்கு அன்று மதிய உணவு அளிக்கப்படும்.
வீரா்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அதற்கான ஆதாரத்தை எடுத்து வரவேண்டும், நூழைவு படிவம் அனுப்பும் நாள் அக்.28-ஆம் தேதி மாலை வரை, நேரடியாக எடுத்துவரும் படிவத்தை ஏற்க முடியாது. கபடி குழுவில் 10 நபா்கள் முதல் 14 நபா்கள் இருக்கவேண்டும்.
மேலும், இதுகுறித்த தகவல்களை மாநில நடுவா் சேட்டு - 9762346453, மாவட்டச் செயலா் ஆனந்தன் - 9787735853 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் வெங்கடாசலபதி.

