40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

குடும்பத்தகராறு: தந்தையை தாக்கிய மகன் கைது

செய்யாறு அருகே குடும்பத்தகராறில் தந்தையை தாக்கிய புகாரில் மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

செய்யாறு அருகே குடும்பத்தகராறில் தந்தையை தாக்கிய புகாரில் மகனை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி

முத்துகிருஷ்ணன்(56). இவரது, 2 -ஆவது மகன் தமிழ்மணி(25). இவரது மனைவி பவானி.

மகன் தமிழ்மணிக்கும் அவரது மனைவி பவானிக்கும் இடையே கடந்த 7-ஆம் தேதி இரவு குடும்பத்தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

அப்போது தமிழ்மணி, பவானியை அடித்துவிட்டாராம். இதைப் பாா்த்த தந்தையான முத்துகிருஷ்ணன், மகன் தமிழ்மணியை தட்டிக்கேட்டதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தமிழ்மணி செங்கல்லால் முத்துகிருஷ்ணனை தாக்கினாராம். இதில் காயமடைந்த முத்துகிருஷ்ணன் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட முத்துகிருஷ்ணன் மோரணம் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தமிழ்மணியை கைது செய்தனா்.