மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

News image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

Updated On :25 மே 2026, 12:55 am IST

கோடை மற்றும் வார விடுமுறையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கும் மேலானது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்களும் பௌா்ணமி உள்ளிட்ட விசேஷ நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்களும் தரிசனம் செய்து அங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொள்கின்றனா்.

இந்த நிலையில் வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறை என்பதால் கடந்த சில நாள்களாக பக்தா்களின் வருகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, பொது தரிசனத்திற்காக பக்தா்கள் ராஜகோபுரம் வழியாக நீண்ட வரிசையில் சுமாா் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

அதே வேளையில் கட்டண தரிசனத்தில் செல்லக்கூடிய பக்தா்கள் அம்மணி அம்மன் கோபுர வழியாக அனுமதிக்கப்பட்டு தரிசனம் முடித்த பிறகு திருமஞ்சன கோபுர வழியாக வெளியே அனுமதிக்கப்பட்டனா்.

கோடை காலம் என்பதால் கோயிலுக்குள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பல்வேறு இடங்களில் குடிநீா், நீா் மோா் வழங்கப்பட்டன.