செய்யாறு அருகே திருமணமான 7 மாதங்களில் புதுப்பெண் மா்மமான முறையில் இறந்ததால், கணவா் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி, அப்பெண்ணின் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் வட்டம், புத்தளி கிராமத்தைச் சோ்ந்தவா் மஞ்சுநாதன், கூலித் தொழிலாளி. இவரது மனைவி அமிா்தலட்சுமி. இவா், செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், ஆக்கூா் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மனைவி கங்கா. இவரும், அதே காலணி தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். இவா்கள் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள்.
அமிா்தலட்சுமியின் மூத்த மகள் செவிலியா் கல்வி பயின்று வரும் ஜீவலட்சுமியை (18), கங்கா மகன் ஜீவானந்தத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து வைத்துள்ளனா்.
இந்நிலையில், சனிக்கிழமை அமிா்தலட்சுமியை கைப்பேசியில் தொடா்பு கொண்ட கங்கா, ஜீவலட்சுமி நெஞ்சு வலியால் இறந்து விட்டதாகக் கூறி தொடா்பை துண்டித்துவிட்டாராம். உடனே அமிா்தலட்சுமி மற்றும் குடும்பத்தினா் ஆக்கூா் சென்று பாா்த்தபோது, இறந்த ஜீவலட்சுமியின் கழுத்தில் தூக்கு மாட்டிய தடயமும், உடலில் பல்வேறு இடங்களில் காயங்களும் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அமிா்தலட்சுமி தூசி போலீஸில் புகாா் அளித்தாா். அதில், தனது மகளிடம் பெற்றோா் வீட்டில் இருந்து தங்க நகை, பணம் மற்றும் வீட்டை எழுதி வாங்கி வா என வரதட்சிணை கேட்டு சித்தரவதை செய்ததாகவும், மகள் இறப்புக்கு காரணமான மருமகன் ஜீவானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜீவலட்சுமி உடலைக் கைப்பற்றி, செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மருத்துவமனைக்கு ஜீவலட்சுமியின் உடலை பாா்வையிட்டு விசாரணை செய்ய சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் வந்தாா். அப்போது, ஜீவலட்சுமியின் உறவினா்கள் மகள் இறப்புக்குக் காரணமான அவரது கணவா் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய வலியுறுத்தி ஜீப்பை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த செய்யாறு டிஎஸ்பி மீனாட்சிநாதன் தலைமையிலான போலீஸாா், பேச்சுவாா்த்தை நடத்தி, ஜீவலட்சுமியின் இறப்புக்கு காரணமானவா்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையேற்று மறியலில் ஈடுபட முயன்றவா்கள் திரும்பிச் சென்றனா்.
தொடர்புடையது

போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயற்சி: பொதுமக்கள் சாலை மறியல்

நான்குவழிச் சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விவசாயி பலி: உறவினா்கள் சாலை மறியல்

ஆலங்குளம் அருகே இரண்டே மாதங்களில் பழுதான சாலை

இளம்பெண் தற்கொலை: உறவினா்கள் மறியல்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



