சுடச்சுட

  

  அரக்கோணத்தில் மின்தடை: வணிகர் சங்கங்கள் கண்டனம்

  By அரக்கோணம்,  |   Published on : 01st July 2013 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரக்கோணத்தில் அடிக்கடி மின்தடை செய்யப்படுவதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் வேலூர் மாவட்ட தலைவர் கே.எம்.தேவராஜ், அரக்கோணம் மளிகை வியாபாரிகள் சங்கச் செயலர் அசோகன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

  ஜூன்24ஆம் தேதி அரக்கோணம் நகரில் மின்தடை செய்யப்பட்ட நிலையில்,  ஜூலை3ஆம் தேதி மீண்டும் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

  மாதம் ஒரு முறை பராமரிப்புப் பணிகளுக்கான மின்வெட்டு எனும் நிலையை மாற்றி, 10 நாள்களுக்குள் மீண்டும் மின்தடை அறிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

  அடிக்கடி மின்தடை எனும் நிலை ஏற்பட்டால் வணிகம் பாதிப்புக்குள்ளாகும். எனவே, இந்நிலையை மின்வாரியம் மாற்றிக் கொள்ள வேண்டும்

  என்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai