சுடச்சுட

  

  ஆக்கிரமிப்புகள் செய்யப்படாமல் இருக்க ஏரி, குளங்களைச் சுற்றி வேலி அமைக்க வேண்டும்

  By குடியாத்தம்  |   Published on : 01st July 2013 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்படாமல் இருக்க அவற்றைச் சுற்றி வேலி அமைக்க வேண்டும் என வேலூர் மாவட்ட காங்கிரஸ் விவசாயப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

  குடியாத்தம் பிச்சனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவ்வமைப்பின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில், மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் ஒரு குளிர்ப்பதன கிடங்கு அமைக்க வேண்டும். ஆத்மா திட்டத்தில் இதுவரை நடந்த செயல்பாடுகள் மற்றும் அத்திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள் யார் என்பது குறித்து வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட வேண்டும். உண்மையான விவசாயிக்கு முழு மானியத்துடன் கூடிய விதைப் பண்ணை அமைக்க வேளாண்துறை உதவ வேண்டும். வேளாண்துறை மூலம் தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை விவசாயப் பணிகளுக்கும் பயன்படுத்தலாம் என அறிவித்த மத்திய அரசுக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் நன்றி தெரிவிப்பது, இத்திட்டத்தை தமிழகத்தில் முதலாவதாக தனியார் நிலத்தில் தொடங்கிய வேலூர் மாவட்ட ஆட்சியர் பொ. சங்கருக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

  கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் விவசாயப் பிரிவு தலைவர் டி.கே. வேலாயுதம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் எஸ்.எம். தேவராஜ் வரவேற்றார்.

  மாநிலத் தலைவர் எஸ். பவன்குமார், மாவட்ட துணைத் தலைவர் ஜே. வேலாயுதம், மாவட்ட பொருளாளர் டி. ஜெகநாதன், நிர்வாகிகள் எம்.என். பாஸ்கரன், எம். ஜெயராமன், எம்.பி. முருகேசன், கே.ஆர். முனிசாமி, பி. மணி, ஆர்.ஆர். விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai