சுடச்சுட

  

  ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி

  By ராணிப்பேட்டை  |   Published on : 01st July 2013 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் பாமக கூட்டணி அமைக்கும். இது திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

  போராட்டங்களில் ஈடுபட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டையை அடுத்த லாலாப்பேட்டை அருகேயுள்ள கிருஷ்ணவரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, கிருஷ்ணன், மணி ஆகிய 3 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவியை அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

  சிறையில் உள்ள பாமகவினரின் குடும்பங்களுக்கு நிதியுதவி மற்றும் பொருளுதவியை வழங்கி வருகிறோம். இதுவரை 8 ஆயிரம் பேர் வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பாமக தொண்டர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்த காவல் துறையினர் மற்றும் ஆட்சியர்கள் மீது வழக்கு தொடர உள்ளோம்.

  அதிமுக, திமுக கட்சிகளுடன் இனி கூட்டணி கிடையாது. வரும் மக்களவைத்  தேர்தலில் பாமக போட்டியிடும். இதையடுத்து, பாமக தலைமையில் ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமையும். அது திராவிட கட்சிகளுக்கு மாற்று அணியாக அமையும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai