சுடச்சுட

  

  ஜலகண்டேஸ்வரர் கோயில் பாதுகாப்புக் குழு தெருமுனைப் பிரசாரம்

  By வேலூர்,  |   Published on : 01st July 2013 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்துவதை கண்டித்து ஜலகண்டேஸ்வரர் கோயில் பாதுகாப்புக் குழுவினர் வேலூர் மாநகரில் ஞாயிற்றுக்கிழமை தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

  கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக கடந்த 22-ம் தேதி அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

   இதையடுத்து ஜலகண்டேஸ்வரர் கோயில் பக்தர்கள், வணிக பிரமுகர்கள் இணைந்து ஜலகண்டேஸ்வரர் கோயில் பாதுகாப்புக்குழு அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  வீடுகள், கடைகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதையடுத்து இக்குழுவினர் வார்டுகள் தோறும் சென்று தெருமுனைப் பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

  அதன் தொடர்ச்சியாக திங்கள்கிழமை காலை 6 முதல் பிற்பகல் 1 மணி வரை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் கூட்டு வழிபாடு நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.

  மறுநாள் மாநகரில் முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai