Enable Javscript for better performance
துளிர் இல்ல மாவட்ட மாநாடு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 2-வது துளிர் இல்ல மாவட்ட மாநாடு ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் சனிக்கிழமை தொடங்கி, 2 நாள்கள் நடைபெற்றது.

    இம்மாநாட்டுக்கு அறிவியல் இயக்கத்தின் மாதனூர் ஒன்றியத் தலைவர் மைக்கேல் தலைமை வகித்தார்.  மாவட்டத் தலைவர் சி. குணசேகரன், நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி. ராஜேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புண்ணியகோட்டி உள்ளிட்டோர் பேசினர்.

    இம்மாநாட்டில் 120 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் ஜெயந்தி, இளவழகன், கோதண்டன், சங்கர் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி டாக்டர் வெங்கடேஷ் பேசினார்.

    ஊராட்சி மன்றத் தலைவர் டி. நந்தன், அறிவியல் இயக்க நிர்வாகிகள் ஈஸ்வரி, ஷீலா, அன்பரசி, மாவட்டக் கருத்தாளர் வே. குமார், ஆசிரியர் டி. மஸ்தான், கருத்தாளர் சுரேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai