சுடச்சுட

  

  பலத்த சப்தம்:சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம்

  By வேலூர்,  |   Published on : 01st July 2013 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சதாப்தி விரைவு ரயில் லத்தேரி அருகே பலத்த சப்தம் கேட்டதால் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

  ரயில் காட்பாடியை அடுத்த லத்தேரிக்கும், காவனூருக்கும் இடையே காலை 8.45 மணியளவில் வந்துகொண்டிருந்தது. அப்போது ரயில் என்ஜின் மீது ஏதோ பொருள்கள் உராய்ந்ததால் பலத்த சப்தம் கேட்டதாம். இதையடுத்து டிரைவர் சீனிவாசராவ் உடனடியாக ரயிலை நிறுத்தி சோதனையிட்டார். அத்துடன் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் அளித்தார்.

  சுமார் 10 நிமிட சோதனைக்கு பிறகு டிரைவர் மீண்டும் ரயிலை இயக்கி காட்பாடியை வந்தடைந்தார்.

  தகவல் அறிந்த காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படையினர் டிரைவர் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று சுற்றுப் பகுதிகளை ஆய்வு செய்தனர். அவர்கள் சோதனையில் எவ்வித தடயமும் சிக்கவில்லை.

  ரயில் பாதை அருகே சிறுவர்கள் சிலர் இரும்புத் துண்டுகளை வைத்துக் கொண்டு விளையாடியதாகவும், அப்போது அவர்களில் யாரேனும் விளையாட்டுக்காக ரயில் என்ஜின் மீது அதை வீசியிருக்கலாம் என்றும் அப்பகுதியினர் சந்தேகம் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai