சுடச்சுட

    

    மாணவி மானபங்க வழக்கில் கைதான 5 பேர் சிறையிலடைப்பு பைக், 3 செல்போன்கள், கத்தி பறிமுதல்

    By குடியாத்தம்  |   Published on : 01st July 2013 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேர்ணாம்பட்டு அருகே பள்ளி மாணவியை மானபங்கம் வழக்கில் கைதான 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து பைக், 3 செல்போன்கள், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    பேர்ணாம்பட்டு பாகர் உசேன் வீதியைச் சேர்ந்தவர் தனியார் பள்ளி ஆசிரியர் சரண்ராஜ் (25). இவர் கடந்த ஆண்டில் பள்ளி மாணவியை மானபங்கம்

    செய்தாராம்.

    அச்சம்பவத்தை, அதே பகுதியைச் சேர்ந்த குடியாத்தம் அரசுக் கல்லூரியின் பி.ஏ. 2ஆம் ஆண்டு மாணவர் விமல் (25), பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ரூபன்(24), பைனான்ஸ் ஊழியர்களான விஜயகுமார் (24), அமர்நாத் (24) ஆகிய 4 பேரும் செல்போனில் படம் பிடித்தார்களாம்.

    இப்படத்தை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி மாணவியிடம் பணம் பறித்ததாக வந்த புகாரின்பேரில், டிஎஸ்பி க. சுந்தரம், குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் எம்.டி. இருதயராஜ், மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜமுனாபாய் ஆகியோர் 5 பேரையும் சனிக்கிழமை கைது

    செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் செல்போனில் எடுத்த காட்சிகளை வேறு செல்போன்களுக்கு புளூடூத் மூலம் அனுப்பியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஒரு பைக், 3 செல்போன்கள், ஒரு கத்தி, ரொக்கம் ரூ.400 ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

    இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை 5 பேரும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai