Enable Javscript for better performance
லாரி விபத்து: மது பாட்டில்கள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் அருகே விரிஞ்சிபுரம் மோட்டூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பீர் பாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில், ரூ.1 லட்சம் மதிப்பிலான பாட்டில்கள் சேதமடைந்தன.

    சென்னையிலிருந்து தருமபுரியை நோக்கி சென்ற சரக்கு லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதில், டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் லேசான காயத்துடன் தப்பினர்.

    அப்போது லாரியில் அட்டை பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபானம் சேதமடைந்திருக்கலாம் என விரிஞ்சிபுரம் போலீஸார் தெரிவித்தனர்.

    பின்னர் மற்றொரு லாரி மூலம் நல்ல நிலையிலிருந்து மது பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் ஏற்றி தருமபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai