Enable Javscript for better performance
வாலாஜா அருகேயுள்ள கொளத்தேரியில் அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில், டிரைவர் காயம் அடைந்தார்.- Dinamani

சுடச்சுட

    

    வாலாஜா அருகேயுள்ள கொளத்தேரியில் அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில், டிரைவர் காயம் அடைந்தார்.

    By வாலாஜாபேட்டை  |   Published on : 01st July 2013 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாலாஜா அருகேயுள்ள கொளத்தேரியில் அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில், டிரைவர் காயம் அடைந்தார்.

    திருத்தணியிலிருந்து வேலூரை நோக்கி ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்த அரசு பஸ் கொளத்தேரி அருகே வந்தது. அப்போது பாமக போராட்டத்தில் பங்கு பெற்று சிறை சென்றவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் காரில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கொளத்தேரி கிராம மேம்பாலத்தை கடந்து சென்றபோது, அரசு பஸ்ஸின் மீது சிலர் கற்களை வீசினராம். இதில், முன்புறக் கண்ணாடி உடைந்தது. மேலும், டிரைவர் சுந்தரராஜன் காயம் அடைந்தார். அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதுகுறித்து வாலாஜா போலீஸார் வழக்குப் பதிந்துளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai