Enable Javscript for better performance
அரக்கோணம் நகராட்சிப் பொறியாளர் பணியிட மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணம் நகராட்சிப் பொறியாளர் பணியிட மாற்றம்

    By அரக்கோணம்,  |   Published on : 02nd July 2013 03:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரக்கோணம் நகராட்சி ஆணையராகப் பொறுப்பு வகித்து வந்த, நகராட்சிப் பொறியாளர் ராஜவிஜயகாமராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    இந்நகராட்சி அலுவலகத்தில் அண்மையில் லஞ்ச ஊழல் தடுப்புத் துறை போலீஸாரால் நடத்திய சோதனையில், லஞ்சம் வாங்கியதாக நகரமைப்பு அலுவலர் குமரவேல் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

    இதையடுத்து, அவர் அளித்த வாக்குமூலத்தின்படி நகராட்சி ஆணையர் செந்தில்முருகன் மீது துறைவாரி நடவடிக்கை எடுக்க போலீஸார் பரிந்துரை செய்தனர். இதன்பேரில், செந்தில்முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, நகராட்சி ஆணையராக நகராட்சி பொறியாளர் ராஜவிஜயகாமராஜ் பொறுப்பு வகித்து வந்தார்.

    இந்நிலையில், ராஜவிஜயகாமராஜ் கடலூர் நகராட்சிக்கு திங்கள்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆற்காடு நகராட்சி பொறியாளர் கோபு அரக்கோணம் நகராட்சி பொறியாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் நகராட்சி அலுவலகவட்டாரங்கள் தெரிவித்தன. இப்போது கோபு அரக்கோணம் நகராட்சி ஆணையராகப் பொறுப்பு வகிப்பார் எனத் தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai