சுடச்சுட

    

    அரசு பஸ் கண்ணாடி உடைப்பு வழக்கில் 4 பேர் கைது

    By வாலாஜாபேட்டை,  |   Published on : 02nd July 2013 03:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாலாஜா அருகேயுள்ள கொளத்தேரி கிராமத்தில் உள்ள மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில், 4 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    சிறையில் உள்ள பாமகவினரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் கார்களில் சென்றுகொண்டிருந்தனர்.

    இவர்கள் மேம்பாலத்தைக் கடந்தபோது, அவ்வழியே சென்ற அரசு பஸ்ஸின் கண்ணாடியை சிலர் கல்வீசி தாக்கினராம். இதில், டிரைவர் சுந்தராஜன் காயம் அடைந்தார்.

    இதுதொடர்பாக வாலாஜாவை சேர்ந்த அசோகன் (24), கம்சன் (21), பெரியதகரகுப்பத்தைச் சேர்ந்த சிலம்பரசன் (20), கசத்தூரை சேர்ந்த ஏழுமலை (22) ஆகிய 4 பேரை வாலாஜா போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai