சுடச்சுட

    

    இந்து முன்னணியின் மாநிலச் செயலர் சு. வெள்ளையப்பன் வேலூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆம்பூரில் திங்கள்கிழமை மாலை கடைகள் அடைக்கப்பட்டன.

    இதையறிந்த நகர பாஜக தலைவர் அன்பு, நகர்மன்ற உறுப்பினர் பி.ஆர்.சி. சீனிவாசன் ஆகியோர் தலைமையில் பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் ஊர்வலமாகச் சென்று பஜாரில் கடைகளை மூடச்சொல்லி

    வலியுறுத்தினர்.

    இதைத் தொடர்ந்து, ஆம்பூரில் கடைகள் அடைக்கப்பட்டன. அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai