சுடச்சுட

    

    ஆம்பூர் பகுதி மக்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீரை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்பூர் அனைத்து வணிகர் சங்கப் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    By ஆம்பூர்  |   Published on : 02nd July 2013 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்பூர் பகுதி மக்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீரை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்பூர் அனைத்து வணிகர் சங்கப் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    ஏலகிரிமலையில் ஞாயிற்றுக்கிழமை அமைப்பின் தலைவர் ஆம்பூர் சி.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆண்டு மகா சபை கூட்டத்தில், மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து, தலைவராக ஆம்பூர் சி. கிருஷ்ணன், செயலராக ஆர். ஞானசேகர், பொருளாளராக வி.எம். இப்ராஹிம், துணைத் தலைவராக ஏ.எஸ். முனீர் அஹமத், துணைச் செயலர்களாக ஆர்.எம். பாலாஜி, இ. வெங்கடேசன், காபந்துக்குழு உறுப்பினர்களாக ஏ.வி. வெங்கடேசன், பி.கே. மாணிக்கம் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத் தலைவர் எம். அமல்ராஜ், மாநில செய்தித் தொடர்பாளர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai