Enable Javscript for better performance
ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட செட்டியப்பனூர், கலந்திரா ஊராட்சிகளில் 1,480 பேருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.- Dinamani

சுடச்சுட

    

    ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட செட்டியப்பனூர், கலந்திரா ஊராட்சிகளில் 1,480 பேருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

    By வாணியம்பாடி  |   Published on : 02nd July 2013 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட செட்டியப்பனூர், கலந்திரா ஊராட்சிகளில் 1,480 பேருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

    செட்டியப்பனூரில் நடைபெற்ற விழாவுக்கு, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சாந்தி தலைமை வகித்தார். வட்டாட்சியர் கீதாராணி வரவேற்றார்.

    இதில், 1005 பேருக்கு விலையில்லாப் பொருள்களை எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து, கலந்திராவில் ஊராட்சி மன்றத் தலைவர் சொப்னா ராஜா தலைமையில் நடைபெற்ற விழாவில், 475 பேருக்கு விலையில்லா பொருள்களை எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் வழங்கினார்.

    விழாக்களில் ஒன்றியக் குழுத் தலைவர் எம்.கோபால், துணைத் தலைவர் சி.அண்ணாசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கே.பி.ஜெயசக்தி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.பி.மணி, பாரதிதாசன், கோவிந்தராஜ், செட்டியப்பனூர் கூட்டுறவு சங்கத் தலைவர் சி.கே.மணி, ஜெயலலிதா பேரவையின் நிர்வாகி நாட்டறம்பள்ளி சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து

    கொண்டனர்.

    மோதகப்பல்லியில்...

    பேர்ணாம்பட்டு ஒன்றியத்துக்குள்பட்ட மோதகப்பல்லி ஊராட்சியில் 321 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை ஆம்பூர் எம்எல்ஏ அ.அஸ்லம்பாஷா திங்கள்கிழமை வழங்கினார்.

    ஒன்றியக் குழுத் தலைவர் டி. பிரபாகரன், பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர் சி.வி. வெங்கடேசன், அதிமுக மாதனூர் ஒன்றியச் செயலர் ஜோதிராமலிங்கராஜா, ஆம்பூர் தொகுதி செயலர் அகரம்சேரி ஆர். வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து

    கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai