சுடச்சுட

    

    சோளிங்கர் அருகே கிணற்றில் விழுந்த 2 மான்கள் மீட்கப்பட்டன.

    இங்குள்ள செங்கலானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கங்கன். இவர் திங்கள்கிழமை தனது நிலத்துக்குச் சென்றபோது, அங்குள்ள 60 அடி அழமுள்ள கிணற்றில் 2 புள்ளிமான்கள் தத்தளித்துக்கொண்டிருந்தது தெரியவந்தது. தகவலின்பேரில் சோளிங்கர் தீயணைப்பு நிலைய (பொறுப்பு) அலுவலர் சக்கரபாணி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 1 மணி நேரம் போராடி மான்களை உயிருடன் மீட்டனர்.

    அப்போது ஒரு மானுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், சிறிது நேரத்தில் இறந்தது.

    இதையடுத்து, ஆற்காடு வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மானை பெற்றுச் சென்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai