சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், கிராம ஊழியர்கள் சங்கம், கிராம உதவியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

  20 ஆண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு துணை வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். கல்வித் தகுதிக்கு ஏற்ப கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.

  வேலூர்

  வேலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்டத் தலைவர் ஏ. தேவபிரகாசம் தலைமை வகித்தார்.   நிர்வாகிகள் மூர்த்தி, ரேணு, சதாசிவம், மாநில நிர்வாகி வி.பலராமன், மாவட்ட நிர்வாகி கே. மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  ஆம்பூர்

  ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க ஆம்பூர் வட்டத் தலைவர் மு. தீனதயாளன் தலைமை வகித்தார். செயலர் சங்கரன், பொருளர் சாமிநாதன், கிராம உதவியாளர்கள் சங்கத் தலைவர் குபேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  வாலாஜாபேட்டை

  தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு வருவாய்க் கிராம ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பினர் வாலாஜா வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவர் எம்.தயாளன் தலைமை தாங்கினார். வட்டச் செயலர் பழனி வரவேற்றார்.

  முன்னாள் வட்டாட்சியர் குப்பன், மாவட்ட துணைச் செயலர் கதிரவன், நிர்வாகிகள்சிவக்குமார், பழனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  அரக்கோணம்

  அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் தாண்டவராயன் தலைமை தாங்கினார். பத்தாண்டுக்கு ஒரு முறை பதவிஉயர்வு, புதிய ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், வங்கிகளில் சம்பளம் வழங்கும் முறையை ரத்து செய்தல், அங்கீகாரம் பெற்ற சங்கங்களுக்கு முறையான கூட்டுக் கலந்தாய்வு நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

  கிராம நிர்வாக அலுவலர்கள் மூர்த்தி, ராமகிருஷ்ணன், சமரபுரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai