சுடச்சுட

    

    குடியாத்தம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

    By குடியாத்தம்,  |   Published on : 02nd July 2013 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு பதவியேற்றனர்.

    விழாவுக்கு சங்கத் தலைவர் என்.எஸ். குமரகுரு தலைமை வகித்தார். செயலர் ஏ.ஜே.ஏ. கார்த்திகேயன் வரவேற்றார்.

    சங்கத்தின் புதிய தலைவராக டி.என். ராஜேந்திரன், செயலராக வி. மதியழகன் மற்றும் நிர்வாகிகளுக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் (தேர்வு) சி.ஆர். ராஜு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    "ஒரு காதல், ஒரு மோதல்' திரைப்பட கதாநாயகன் விவேக் ராஜகோபால், நகர்மன்றத் தலைவர் அமுதாசிவப்பிரகாசம், அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என். பழனி, மாவட்ட விவசாய பிரிவுச் செயலர் வி. ராமு, அரசு வழக்குரைஞர் கே.எம். பூபதி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் கே. ஜவரிலால் ஜெயின், என். சத்தியமூர்த்தி, கே. சுகுமார், எம்.எஸ். திருநாவுக்கரசு, பி.எல்.என். பாபு, கே.எம். ராஜேந்திரன், கே. சந்திரன், பி. அன்பரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவையொட்டி, மாற்றுத் திறனாளி முத்துவுக்கு 3 சக்கர சைக்கிளும், மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகைகளும் வழங்கப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai