சுடச்சுட

    

    கொடிக் கம்பம் அமைப்பதில்  தகராறு:4 பேர் காயம்; 2 பேர் கைது

    By வாணியம்பாடி  |   Published on : 02nd July 2013 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜோலார்பேட்டை அருகே அதிமுக கொடிக்கம்பம் அமைப்பதில் ஏற்பட்ட மோதலில், பெண் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட புல்லாநேரி ஊராட்சி ஒட்டப்பட்டியைச்  சேர்ந்தவர் தனபால் (62). இவரது மனைவி லலிதா (55).

    புல்லானேரி பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள இவர்களுக்குச் சொந்தமான நிலத்தின் அருகே திங்கள்கிழமை அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பெரியண்ணன் மகன்கள் ராஜாமணி (38), சிவக்குமார் (31), ரமேஷ் (29) ஆகியோர் அதிமுக கொடிக் கம்பம் நடுவதற்கான பணியில் ஈடுபட்டனராம்.

    இதை லலிதா, அவரது மகன்கள் மணிகண்டன் (25), சரவணன் (23), லலிதாவின் தம்பி வீரன் (37) ஆகியோர் தட்டிக் கேட்டனராம். இதில், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், லலிதா, ராஜாமணி, ரமேஷ், சிவக்குமார் ஆகியோர் காயமடைந்தனர்.

    இரு தொடர்பான இரு தரப்பினரும் அளித்த தனித்தனியான புகார்களின்பேரில், ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குகள் பதிந்து, சரவணன், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.  

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai