சுடச்சுட

  

  வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை ஏற்க இருப்பதை கைவிடக் கோரி கோயில் பாதுகாப்புக் குழு சார்பில் கூட்டுப் பிரார்த்தனை திங்கள்கிழமை நடைபெற்றது.

  வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை ஏற்க இருப்பதாக அண்மையில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சேர்ந்து ஜலகண்டேஸ்வரர் கோயில் பாதுகாப்புப் குழுவை அமைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஜலகண்டேஸ்வரர் கோயிலில் கூட்டுப் பிரார்த்தனை திங்கள்கிழமை நடைபெற்றது.

  பிரார்த்தனையில் வனதுர்கை பீடத்தை சேர்ந்த பிரசாத் சுவாமிகள், காசி பாலகுரு சுவாமிகள், சைவ சித்தாந்த பேரவை மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டுப் பிரார்த்தனையில் பஜனை பாடல்கள் பாடப்பட்டன. சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai