சுடச்சுட

    

    முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 6-ல் சென்னை கோட்டையை நோக்கி தமுமுக சார்பில் நடைபெற உள்ள பேரணி குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

    கூட்டத்துக்கு அமைப்பின் நகரச் செயலர் எஸ். தப்ரேஸ் அஹமத் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் கோவை செய்யது, எம்எல்ஏ அ. அஸ்லம் பாஷா, மாவட்டச் செயலர் வி.இஜட். அப்துல் ஷூக்கூர், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் வி.ஆர். நசீர் அஹமத், பேச்சாளர் சி.கே. சனாவுல்லா, நகரச் செயலர் எஸ்.ஏ. ஹமீத், நகர உலமா அணி செயலர் வி.ஆர். பயாஸ் அஹமத், நகர மருத்துவ சேவை அணி துணைச் செயலர் டி. நபீல் அஹமத், மாவட்ட பொருளாளர் வி. மிஸ்பாஹிர் ரஹமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai