சுடச்சுட

  

  ஆற்காடு லட்சுமி லோகநாதன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நீரிழிவு நோய்க்கான இலவச மருத்துவ முகாம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் செவிலியர் கல்லூரி, மகளிர் செவிலியர் பயிற்சி பள்ளி, காட்பாடி ஸ்டெர்லிங் நீரிழிவு நோய் மருத்துவமனை, அகர்வால் கண் மருத்துவமனை, பிராங்கோ- இந்தியன் பார்மாசூட்டிக்கல்ஸ் ஆகியன இணைந்து இம்முகாமை நடத்தின.

  இம்முகாமுக்கு ஆற்காடு ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டி.எல்.பாலாஜி தலைமை தாங்கினார்.

  செயலர் சாந்தி பாலாஜி, பிரண்ட்ஸ் அறக்கட்டளையின் தலைவர் ஞானமூர்த்தி, வசிஸ்டேஸ்வரர் அறக்கட்டளையின் தலைவர் ஏ.எல்.பாலாஜி, மகாலட்சுமி மகளிர் செவிலியர் கல்லூரி முதல்வர் ஏ.வனிதா தேவி, பள்ளி முதல்வர்கள் இ.மஞ்சுளா, நளினிபாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  முகாமில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவர்கள் கார்த்திகேயன், சாந்தா கவிதா ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டு, ஆலோசனைகளை வழங்கினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai