Enable Javscript for better performance
பைக் திருட்டு:இளைஞர் கைது - Dinamani

சுடச்சுட

    

    பைக், மடிக்கணினி திருட்டு தொடர்பாக இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    காட்பாடி விருதம்பட்டு பகுதியில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பைக்கில் வந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்ததில் அவர் காந்திநகர் பகுதியை சேர்ந்த முரளி (24) என்பதும், அவர் தொண்டான்துளசி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரின் பைக்கையும், கரிகிரி கொல்லைமேடு பகுதியை சேர்ந்த குமரபதி, வேலூர் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பாரதிதாசன் ஆகியோரின் மடிக்கணினிகளையும் திருடியது தெரியவந்தது.

    அவரை கைது செய்து அவரிடமிருந்து பைக், மடிக்கணினிகளை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai