சுடச்சுட

  

  மழை வேண்டி, ஆற்காடு தோப்புக்கானாவில் உள்ள அருள்மிகு கங்காதர ஈஸ்வரர், வரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு யாகம் திங்கள்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி, 9 மணி வரை நடைபெற்றது.

  அப்போது சிவனுக்கு திருமுறைகள் ஓதியும், திருமாலுக்கு திவ்யப் பிரபந்தங்கள் ஓதியும் தனித்தனியாக அபிஷேகங்களும், அர்ச்சனைகளும் நடைபெற்றன. ரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், திருவலம் ஸர்வ மங்களா பீடம் ஸாந்தா சுவாமிகள், நகர்மன்றத் தலைவர் ஆர்.புருஷோத்தமன், மகாத்மா காந்தி அறக்கட்டளையின் தலைவர் ஜே.எல்.ஈஸ்வரப்பன், கோயில் திருப்பணிக் குழுத் தலைவர் கு.சரவணன், ஆற்காடு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெ.திருநாவுக்கரசு, காமராஜர் அறக்கட்டளையின் தலைவர் பென்ஸ் பாண்டியன், ஆற்காடு அரிமா சங்க நிர்வாகி ஆரியாஸ் பத்பநாபன் உள்ளிட்டோர் கலந்து

  கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai