சுடச்சுட

  

  மாட்டிறைச்சி கடை நடத்த உரிமம்:வியாபாரிகள் கோரிக்கை

  By வேலூர்,  |   Published on : 02nd July 2013 03:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாட்டிறைச்சி கடைகள் நடத்த உரிமம் தரக் கோரி வேலூர் மாநகர மாட்டு இறைச்சி வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  வேலூரில் திங்கள்கிழமை நடந்த சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்துக்கு தலைவர் வி.எஸ். பாபுகான் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜி.சலீம், பி.அரஜுனன், எம். பாபு, எஸ். தஸ்தஜீர், ஏ. அயூப்கான், இஜட். தாஜீத்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  மாநகராட்சியில் ஆட்டுத் தொட்டி இருப்பது போல மாடுகளை அறுக்க மாட்டுத் தொட்டி ஏற்படுத்தித் தர வேண்டும். மாட்டு இறைச்சி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை அரசு நலவாரியத்தில் இணைத்து நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai