Enable Javscript for better performance
ராணிப்பேட்டையில் அதிமுக பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக அரசின் சாதனைகளை விளக்கி, ராணிப்பேட்டை நகர அதிமுக சார்பில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

    கூட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலர் ஜே.பி.சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் அ.முகமதுஜான் சிறப்புரையாற்றினார். பேச்சாளர் நெத்தியடி நாகையன், மாநகர் மாவட்டச் செயலர் சுமைதாங்கி சி.ஏழுமலை, ஜெயலலிதா பேரவையின் மாவட்டச்  செயலர் வி.முரளி, இணைச் செயலர் கே.பி.சந்தோஷம்,  நகர்மன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம், கட்சியின் நகர அவைத்தலைவர் இரா.குமரன், நகர துணைச் செயலர் என்.கே.மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai