சுடச்சுட

  

  இந்து முன்னணியின் மாநிலச் செயலர் வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த இந்தப் பையை போலீஸ் மோப்ப நாய் "சீட்டா' கண்டுபிடித்துள்ளது. ஆனால் அப்பொழுது எவரும் அந்தப் பையை  சரியாகப் பார்க்கவில்லை.

  சில மணி நேரம் கழித்து, அந்தப் பையை போலீஸார் கண்டெடுத்தனர்.

  பின்னர் பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில் சுமார் முக்கால் அடி நீளமுள்ள 5 பைப் வெடிகுண்டுகள், சிகப்பு நிற சட்டை, வெள்ளையப்பனின் படத்துடன் செய்தி பிரசுரமாகியிருந்த ஒரு நாளிதழ் இருந்துள்ளது.

  இதைத் தொடர்ந்து, குண்டுகளை செயல் இழக்கச் செய்வதற்காக வேலூர் வடக்கு காவல் நிலையத்திலிருந்து நேதாஜி விளையாட்டு அரங்குக்கு போலீஸார் கொண்டு சென்றனர்.  வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வதற்காக வெடிகுண்டு நிபுணர்கள் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட உள்ளதாகவும், அதனால் செவ்வாய்க்கிழமை காலையில் தான் அது செயலிழக்கச் செய்யப்படும் எனவும் போலீஸார் தெரிவித்தனர். 

  பைப் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதால் நேதாஜி விளையாட்டு அரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai