சுடச்சுட

    

    இந்து முன்னணியின் மாநிலச் செயலர் வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மேலும், பல இடங்களில் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

    வாணியம்பாடி

    வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே பாஜக, இந்து முன்னணி, அனுமன் சேனை அமைப்புகளைச் சேர்ந்த 25 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ஊர்வலமாகச் சென்றனர்.

    இதையடுத்து, கிரி, சிவக்குமார், வெள்ளகுட்டை க.சிவப்பிரகாசம் உள்ளிட்ட 25 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    மேலும், நகரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.

    திருப்பத்தூர்

    திருப்பத்தூரில் கச்சேரி தெரு, ஆலங்காயம் சாலை, வாணியம்பாடி சாலை, கிருஷ்ணகிரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே மாநில நெடுஞ்சாலையில் இந்து முன்னணி, பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் சமரசம் செய்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

    ஆம்பூர்

    ஆம்பூரில் எம்.சி. ரோடு, பிராட் பஜார், நேதாஜி சாலை, உமர்சாலை, பஜார், ஷராப் பஜார், பைபாஸ் சாலை உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலும் கடைகள், உணவகங்கள், தேநீர்க்  கடைகள் என அனைத்து கடைகளும் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன.

    ஆம்பூரில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, நகர பாஜக தலைவர் எம். அன்பு, இந்து முன்னணி நிர்வாகி ஏழுமலை ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில கல்வியாளர் அணி துணைத் தலைவர் எம். தீனதயாளன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெள்ளக்குட்டை க. சிவப்பிரகாசம், முன்னாள்த் நகர தலைவர் விஜயகுமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    பேர்ணாம்பட்டு

    பேர்ணாம்பட்டு பஸ் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, நகர பாஜக தலைவர் பி.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்புச் செயலர் பி.ஈஸ்வர், மாவட்ட சிறுபான்மைக் குழுத் தலைவர் ஹாஜி ரபீக் அஹமத் ஆகியோர் பேசினர். நகர பொதுச் செயலர் எஸ்.ஜெகதீசன், ஒன்றியத் தலைவர் ஆர்.வி.குப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    வாலாஜா

    வாலாஜாவில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. இதேபோல், சோளிங்கர், காவேரிப்பாக்கம் பகுதிகளில் உள்ள 50 சதவீதத கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

    வாலாஜா நகராட்சி அலுவலகம் எதிரே இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     இந்து முன்னணியின் மாவட்டத் தலைவர் துரைசக்தி தலைமை தாங்கினார்.

    மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ், நிர்வாகிகள் ஆர், செல்வராஜ், கே.கார்த்தி, கண்ணன், மோகன், பாஜக நிர்வாகிகள் என்.பி. வெங்கடராமன், ஞானவேல், ரவீந்திரநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அரக்கோணம்

    அரக்கோணத்தில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்துக்கு, இந்து முன்னணியின் மாவட்டத் துணைத் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். நகர நிர்வாகி கோபிசாமி, பாஜக மாவட்டப் பொதுச்செயலர் முத்துகுமரன், நகரத் தலைவர் லியோவேலு, நகரச் செயலர் சின்னிபிரசன்னா, நகர அமைப்பு செயலர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ஊர்வலம் எஸ்.ஆர்.கேட்டில் தொடங்கி, வட்டாட்சியர் அலுவலகம் அருகே முடிவடைந்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai