Enable Javscript for better performance
இயக்கத்துக்காக வேலூரை சொந்த ஊராக மாற்றிக் கொண்டவர்- Dinamani

சுடச்சுட

    

    இயக்கத்துக்காக வேலூரை சொந்த ஊராக மாற்றிக் கொண்டவர்

    By வேலூர்  |   Published on : 03rd July 2013 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொலை செய்யப்பட்ட சு.வெள்ளையப்பன் வேலூரில் 18 ஆண்டுகளாக ஆன்மிகத் தொண்டில் ஈடுபட்டு வந்தவர் என்பதால் அவரை அறியாதவர்கள் மிகக் குறைவு.

    திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோயிலில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள துரைசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளயப்பனின் தந்தை சுப்பாரெட்டியார், தாய் சின்னம்மா. இவருக்கு 2 சகோதர்களும், 3 சகோதரிகளும் உள்ளனர்.

    விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர் இளம் வயது முதல் இந்து முன்னணி  இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார். திருமணம் செய்து கொள்ள மறுத்த இவர், வேலூருக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார்.

    முழுநேர இந்து முன்னணி இயக்க தொண்டராகப் பணியை தொடர்ந்த இவர், வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவை  இயக்கத்தின் சார்பில் சிறப்பாக நடத்தி வந்தார்.

    அவரது சடலத்துக்கு வேலூரில் இறுதிச் சடங்கு செய்ய விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

    இருப்பினும் அவரது சகோதரர் மகன்கள் சுந்தர், முருகேசன் ஆகியோர் சொந்த ஊருக்கு கொண்டுச்செல்ல விரும்பியதையடுத்து, அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai