சுடச்சுட

  

  ஜலகண்டேஸ்வரர் கோயில் பாதுகாப்புக் குழு அமைப்பாளராக செயல்பட்டு வந்த சு. வெள்ளையப்பன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை அறிந்தும் அதை அரசுக்கு உளவுத் துறை தெரிவிக்க தவறி விட்டது என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம் குறை கூறினார்.

  இதுதொடர்பாக வேலூரில் அவர் கூறியதாவது: வெள்ளையப்பன் கொலை திடீரென நடந்திருக்க வாய்ப்பில்லை. இது திட்டமிட்ட கொலை சதியாக தெரிகிறது. சமீபகாலமாக தமிழகத்தில் பயங்கரவாதக் கும்பல்  இந்து முன்னணி இயக்க தோழர்களை குறிவைத்து கொன்று வருகிறது.

  பரமக்குடியில் முருகன், நாகப்பட்டினத்தில் புகழேந்தி, குன்னூரில் ஹரி என  கொலைகள் தொடர்கின்றன.

  லவ் ஜிகாத் செயல்பாடுகளை கடுமையாக வெள்ளையப்பன் எதிர்த்தார். அதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதை அறிந்தும், அதைப் பற்றி அரசுக்கு உள்ளூர் உளவுப்பிரிவினர் தகவல் தரவில்லை. பொதுவாக உளவுப் பிரிவினர் அரசிடம் நல்ல பெயர் எடுக்கும் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அரசை  திருப்திபடுத்துவதில்தான் கவனம் செலுத்துகின்றனர். இதனால்தான் தமிழகத்தில் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன.

  தமிழக அரசு பயங்கரவாத செயல்களை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் முருகானந்தம்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai