சுடச்சுட

    

    ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

    By ராணிப்பேட்டை  |   Published on : 03rd July 2013 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : ராணிப்பேட்டை அருகேயுள்ள ஆட்டோ நகரில் இயங்கிவரும் தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணியாற்றும் 250 பேர் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இத்தொழிற்சாலையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இதில், 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 30 ஆண்டுகளாகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருவதாகவும், பேச்சுவார்த்தை நடத்த சென்றபோது நிர்வாகம் முன்வராததால் கடந்த சில நாள்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக தொழிலாளர் நல அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தொழிலாளர் பிரதிநிதிகளை உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் எனக் கூறி 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ராணிப்பேட்டை காவல்நிலையத்தில் மனு அளித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai