சுடச்சுட

  

  வெள்ளையப்பனுக்கு போலீஸ் தகுந்த பாதுகாப்பு தர தவறிவிட்டதாக இந்து முன்னணி நிறுவனர் தலைவர் இராம.கோபாலன் வேலூரில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

  வெள்ளையப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த இராம.கோபாலன் செய்தியாளர்களிடம் கூறியது: வெள்ளையப்பன் கொலைக்கு போலீஸ் புலனாய்வுத் துறையின் மெத்தனப் போக்கே காரணம்.

  தமிழ்நாட்டில் கொலைகள் அதிகரித்து வருகின்றன.   கொலை செய்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. கொலை செய்தவர்களை போலீஸார் விரைவில் கண்டுபிடிப்பார்கள் என நம்புகிறோம்.

  தமிழ்நாட்டில் கொலை செய்துவிட்டு எளிதாகத் தப்பிச் செல்லும் நிலை உள்ளது. இதனைத் தொடர அனுமதிக்கக் கூடாது. ஜலகண்டேஸ்வரர் கோயிலை இந்து சமய அறநிலையத் துறையிடமிருந்து மீட்க வெள்ளையப்பன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.  அந்தப் பணியை இந்து முன்னணி தொண்டர்கள் தொடர வேண்டுமென இராம.கோபாலன் கேட்டுக் கொண்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai