சுடச்சுட

    

    மத்திய அரசை கண்டித்து வேலூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்

    By வேலூர்  |   Published on : 03rd July 2013 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    என்எல்சியின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து அதிமுக சார்பில் வேலூர் தலைமை தபால் நிலையம் எதிரிóல் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வேலூர் புறநகர் கிழக்கு, மாநகரம், புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை பொருளர் எம். அப்துல் அமீது தலைமை வகித்து பேசியது,  கடந்த காலங்களில் மத்திய அரசு என்எல்சி பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்த போது அதனை எதிர்த்தது அதிமுக தான்.  நல்ல இலாபம் ஈட்டி வரும் என்எல்சியின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுமென தமிழக முதல்வர் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  அதனை ஏற்றுக் கொண்டு பங்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுமென அவர் பேசினார்.

    வேலூர் மாநகர மாவட்ட செயலர் எஸ்.சி. ஏழுமலை, வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலர் எஸ்.ஆர்.கே. அப்பு, வேலூர் புறநகர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் டி.கே. முருகேசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் டாக்டர் வி.எஸ். விஜய், ஏ. முகமது ஜான், வி.கே.ஆர். சீனிவாசன், சு.ரவி, கே.ஜி. ரமேஷ், கோவி. சம்பத்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலர்கள் பெல். தமிழரசன், வழக்கறிஞர் அண்ணாமலை, சாமிக்கண்ணு, கட்சியின் வேலூர் நகர செயலர் கே. வேதகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai