சுடச்சுட

  

  முதல்வர் ஜெயலலிதாவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

  By வேலூர்  |   Published on : 03rd July 2013 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஹிந்து தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இதுகுறித்துப் பேச தமிழக முதல்வர் ஜெயலலிதா எங்களுக்கு நேரம் ஒதுக்கித்தர வேண்டுமென பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

  வேலூரில் சு.வெள்ளையப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்த செவ்வாய்க்கிழமை வந்த பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:

  போலீஸார் சரியான குற்றவாளிகளைக் கைது செய்வதேயில்லை. ராமநாதபுரத்தில் முருகேசன் என்ற பாரதிய ஜனதா கட்சித் தொண்டர் படுகொலை செய்யப்பட்டார்.  குன்னூர், மேட்டுப்பாளையம், நாகர்கோயில் ஆகிய பகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சியினர் தாக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

  போலீஸாரை சுதந்திரமாக செயல்பட வழிவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் உண்மையான குற்றவாளிகளைப் பிடிப்பார்கள். தமிழகத்தில் ஹிந்து தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

  இதுகுறித்து தமிழக முதல்வரை சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளோம். அதற்கு தமிழக முதல்வர் நேரம் ஒதுக்கித் தர வேண்டுமென பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai