சுடச்சுட

    

    ராணிப்பேட்டையை அடுத்த பாரதி நகர் பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் 30 பவுன் தங்க நகை,  ரூ.30 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் புதன்கிழமை திருடிச் சென்றனர்.

    ராணிப்பேட்டையை அடுத்த பாரதி நகர் அருகே உள்ள ராணிபெல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (56). இவர் சேர்க்காடு கனரா வங்கியில் உதவியாளராக உள்ளார். இவரது மனைவி  காஞ்சனா (54) இவர் தெங்கால் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக உள்ளார்.

    இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் புதன்கிழமை காலை இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர். பின்னர் இருவரும் மாலை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்துள்ளன. இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

    ஜெயசீலன் தனது வீட்டை லாரி உரிமையாளர் ரகு (50) என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அவரது வீட்டில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கால் கொலுசை திருடிச் சென்றுள்ளனர்.

    இவர்களது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர் ஸ்காட் (42). இவர் திருவலம் அருகே பேப்ரிகேஷன் தொழிற்சாலை நடத்திவருகிறார். இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் தங்க நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai