சுடச்சுட

  

  பேர்ணாம்பட்டு அருகே அரசுக்குச் சொந்தமான வேப்ப மரங்களை வெட்டி விற்றவர் கைது செய்யப்பட்டார்.

  பேர்ணாம்பட்டு அடுத்த பொகளூர் கிராமத்தில், பாதை புறம்போக்கு நிலத்தில் வளர்ந்திருந்த 36 வேப்ப மரங்களை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் சில நாள்களுக்கு முன் வெட்டி ரூ.82 ஆயிரத்துக்கு விற்று விட்டாராம்.

  இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் பொ.சங்கருக்கு கடந்த 28ஆம் தேதி புகார் மனு அனுப்பினர்.

  ஆட்சியர் உத்தரவின்பேரில் புகார் மனு தொடர்பாக வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பித்தனர்.

  இதனடிப்படையில் மரங்களை வெட்டி விற்றவருக்கு உடந்தையாக இருந்ததாக, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி, கிராம சிப்பந்தி சுரேஷ் இருவரையும் வேலூர் கோட்டாட்சியர் என்.சண்முகசுந்தரம் கடந்த 29ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் குறித்து குடியாத்தம் வட்டாட்சியர் எம்.கஜேந்திரன் மேல்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

  புகார் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், மரங்களை வெட்டி விற்றதாக அதே கிராமத்தைச் சேர்ந்த செங்கல்வராயன் (60) என்பவரை புதன்கிழமை கைது செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai