சுடச்சுட

  

  குடியாத்தம் அருகே பழமைவாய்ந்த ஸ்ரீஅனுமந்தராய சுவாமி கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

  இதற்கான அறிவிப்பு கோயில் நுழைவு வாயிலில் புதன்கிழமை வைக்கப்பட்டது.  குடியாத்தத்தை அடுத்த மொரசபல்லி கிராமத்தில் குன்றின் மீது அமைந்துள்ளது அருள்மிகு அனுமந்தராய சுவாமி கோயில். 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது.

  இக்கோயிலையும், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தையும் தனிநபர்கள் சிலர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை இக்கோயிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான, சுமார் ரூ.1.50 கோடி மதிப்புள்ள 11 ஏக்கர் நிலமும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

  இக்கோயில் தக்காராக ப.பரந்தாமக்கண்ணன், எழுத்தராக ஏ.ஜோதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai