சுடச்சுட

  

  வேலூர் பழைய மாநகராட்சி கட்டடத்தின் மீது அதிகாலையில் இளைஞர் ஒருவர் ஏறி நின்றுகொண்டு கீழே குதித்து விடப்போவதாக உரக்கக் கத்தியுள்ளார்.  அப்போது அங்கிருந்தவர்கள் உடனடியாக வேலூர் தெற்கு போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

  அவரை சமாதானப்படுத்தி கீழே இறங்கச் செய்ய பொதுமக்கள் முயற்சித்தனர். ஆனால் அவர் கீழே இறங்கி வர மறுத்துள்ளார். போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் அங்கு விரைந்து சென்று அவரிடம் பேசிக் கொண்டே ஏணியில் ஏறிச் சென்று அவரை சமாதானப்படுத்தி கீழே அழைத்து வந்தனர்.

  அந்த இளைஞர் வேலூர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் வசந்தியின் மகன் செந்தில்குமார் (30) என்பது தெரியவந்தது. போலீஸார் அவருக்கு அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.

  அவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்ததற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai