சுடச்சுட

    

    ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் அருகே உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியராகப் பணிபுரிந்து வருபவர் குணசேகரன்(54). இவர் அதே ஆலை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது சொந்த ஊரான திட்டக்குடிக்குச் சென்றுவிட்டு தனது வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் சென்றபோது, வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து குணசேகரன் திருவலம் போலீஸில் புதன்கிழமை புகார் அளித்தார். அதன் பேரில் திருவலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai