சுடச்சுட

  

  ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பயணியிடமிருந்து பணம், செல்போன் திருடிய இமாசலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

  சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் மனைவி சசிதேவி (39). இவர் சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கு ஹைதராபாதிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்கள் பெட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு பயணம் செய்தார். ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில் நின்றபோது மர்ம நபர் ஒருவர் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த சசிதேவியின் கைப்பையைப் பறித்துக் கொண்டு மாயமானார்.

  இதுகுறித்து ரயில்வே போலீஸாரிடம் சசிதேவி புகார் அளித்தார். அதில் கைப்பையில் செல்போன், வாட்ச், ரொக்கப் பணம் ரூ.500 வைத்திருந்ததாக புகார் அளித்தார். புகாரின் பேரில் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 3-வது பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த இளைஞரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் இமாசலப் பிரதேச மாநிலம், நடோன் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் சர்மா (30) என்பதும் சசிதேவியிடம் கைப்பையைத் திருடி சென்றதும் தெரியவந்தது.

  இது தொடர்பாக வழக்குப் பதிந்து அஜித் சர்மாவிடமிருந்து கைப்பையைப் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai