சுடச்சுட

    

    வாலாஜாபேட்டையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    வாலாஜாபேட்டை எல்லப்பச் செட்டித் தெருவைச் சேர்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி அஞ்சலி (22). இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்குத் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.

    அஞ்சலிக்கு அடிக்கடி வயிற்று வலி வருவதுண்டாம். வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்றும் பலன் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் அஞ்சலிக்கு வயிற்று வலி வந்ததாகக் கூறப்படுகிறது.

    இதில் விரக்தியடைந்த அஞ்சலி செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இச்சம்பவம் குறித்து வாலாஜா போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர், அஞ்சலிக்குத் திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் பிரியதர்ஷினி மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai